8 தீவிரவாதிகளுக்கு தூக்கு தண்டனை: பாகிஸ்தான் தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் உத்தரவு

Suresh| Last Modified திங்கள், 5 ஜனவரி 2015 (17:46 IST)
பாகிஸ்தானில் 8 தீவிரவாதிகளை தூக்கிலிட தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தானின்
பெஷாவர் ராணுவ பள்ளியில் நுழைந்து 132 குழந்தைகளை சுட்டுக்கொன்ற சம்பவத்துக்குப் பின்னர் தலிபான் தீவிரவாதிகள ஒழிப்பதில் அந்நாட்டு அரசு தீவிரம் காட்டி வருகின்றது.

கடந்த 2008ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தானில் தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

பாகிஸ்தானில் கடந்த டிசம்பர் மாதம் பெஷாவரில் உள்ள ராணுவ பள்ளிக்கூடத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உள்பட 150 பேர் கொல்லப்பட்டதை அடுத்து மரண தண்டனை தடை சட்டத்தை பாகிஸ்தான் அரசு நீக்கியது. இதைத் தொடர்ந்து, டிசம்பர் மாதத்தில் மட்டும் 6 தீவிரவாதிகள் தூக்கிலிடப்பட்டனர்.
இந்நிலையில் பாகிஸ்தான் தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் பல்வேறு தீவிரவாத செயல்களில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ள 8 தீவிரவாதிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளது.

இம்மாதம் 7ஆம் தேதி ஒரு தீவிரவாதிக்கும், மற்ற 7 தீவிரவாதிகளுக்கு 13,14 மற்றும் 15ஆகிய தேதிகளிலும் தூக்கிலிடப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :