1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 20 ஜூலை 2017 (18:17 IST)

பூமியே அழிந்தாலும் இந்த உயிரினம் அழியாது தெரியுமா?

பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் அழிந்து, பூமியும் அழிந்து மற்ற கோள்கள் அனைத்து அழிந்தாலும் அழியாமல் இருக்கும் உயிரினம் ஒன்று உள்ளது.


 
 
பொதுவாக இந்த உயிரினம் கடலின் அடிப்பகுதியிலும், பனிப் பிரதேசங்களிலும் வாழ்கின்றன. இது பார்பதற்கு கரடி போல் இருக்கும். 
 
இந்த உயிரினம் அதிகபட்சமாக 0.5 மில்லி மீற்றர் அளவிற்கு வளரக்கூடிய நுண்ணுயிரி. நீர் மற்றும் உணவு இல்லாமல் இதனால் 30 வருடங்கள் வரை வாழ முடியும்.
 
150 டிகிரி வெப்ப நிலையிலும், உறைய வைக்ககூடிய விண்வெளியிலும் உயிர் வாழுக்கூடியது. மனிதர்களால் தாங்கக்கூடிய கதீர்வீச்சு அளவை விட, 1000 மடங்குக்கு அதிகமான கதிர்வீச்சை தாங்கிக் கொள்ளும்.
 
இந்த உயிரனத்தின் பெயர் டார்டி கிரேட். இது நீர் கரடி என்றும் அழைக்கப்படுகிறது.