வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 29 அக்டோபர் 2020 (17:27 IST)

6 மாத காலமாக ஒரு கொரோனா தொற்று கூட இல்லையாம் – சாதித்துக் காட்டிய தைவான்!

உலகமே கொரோனாவால் அச்சத்தில் இருக்கும் போது ஒரு நாடு மட்டும் அதை சிறப்பாகக் கையாண்டு உள்ளது.

அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் சீனா போன்ற முன்னேறிய நாடுகளையெ கொரோனா ஒரு ஆட்டு ஆட்டிவிட்டது. ஆனால் ஒரு குட்டி நாடு அதை சிறப்பாக எதிர்கொண்டுள்ளது. அந்த நாடு தைவான்தான். இதுவரை வெறும் 533 பேர் மட்டுமே அந்த நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதிக்குப் பின்னர் இதுவரை ஒரு கொரோனா தொற்றுக் கூட பதிவாகவில்லையாம்.

இதற்குக் காரணம் கொரோனா பரவல் அதிகமான போது அந்த நாடு எல்லைகளை மூடி கடும் கட்டுப்பாடுகளை விதித்ததுதானாம்.