செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 18 மே 2023 (18:47 IST)

அதிபர், பிரதமரை விட அதிகம் சம்பளம் பெறும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்!

பாகிஸ்தான் நாட்டில் பிரதமர் மற்றும் அதிபரை விட அந்த நாட்டின் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிக சம்பளம் பெறுவதாக தகவல் வெளியாகிறது.

பாகிஸ்தான் நாட்டில் பிரதமர் ஷபாஷ் ஷெரீப் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில்,  பாகிஸ்தான் நாட்டு பொதுகணக்கு குழு அந்த  நாட்டின் பிரதமர், அதிபர் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் பெறும் சம்பள விவரங்களை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தி  நியூஸ் இண்டர் நேசனல் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில்,  அந்தக் குழுவின் தலைவர் நூர் கான், பாகிஸ்தான் அதிபர் பாகிஸ்தானிய ரூபாய் மதிப்பின்படி ரூ.896650 சம்பளம் பெறுகிறார் என்று கூறியுள்ளார்.

அந்த நாட்டின் பிரதமர் ஷபாஷ் ஷெரீப் ரூ.201574 சம்பளம் பெருகிறர். பாகிஸ்தான் நாட்டின் உச்ச நீதிமன்ற நீதிபதி ரூ.1527399  சம்பளம் பெறுகிறார் எனவும், உச்ச நீதிமன்றத்தில் உள்ள மற்ற நீதிபதிகளின் சம்பளம் ரூ.1470711 என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அமைச்சர்களின் சம்பளம் ரூ.338125  என்றும், நாடாளுமன்ற எம்பிகளின் சம்பளம் ரூ.188000 என்றும்,  கிரேடு 22 நிலையிலான அதிகாரி ரூ.591475 சம்பளம் பெறுவதாக தகவலில் கூறப்பட்டுள்ளது.