பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தன்னைத் தானே சுட்டுக் கொண்ட மாணவர்: அதிர்ச்சி சம்பவம்..!
அமெரிக்காவில் பிறந்தநாள் கொண்டாடிய மாணவர் ஒருவர் தவறுதலாக தன்னைத் தானே சுட்டுக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் கல்வி பயின்று வரும் இந்திய மாணவர் ஆர்யன் ரெட்டி சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அந்த நேரத்தில் அவர் புதிதாக வாங்கிய துப்பாக்கியை சுத்தம் செய்யும் போது தவறுதலாக தன்னைத்தானே சுட்டுக் கொண்டார்.
கன்யாஸ் மாநில பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் படித்து வந்த ஆரியன், துப்பாக்கியை பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது சுத்தம் செய்தார். அப்போது அவர் தன்னைத்தானே தவறுதலாக சுட்டுக்கொண்டதால் ரத்தவெள்ளத்தில் கிடந்தார். அவரது அறைக்கு வந்த நண்பர்கள் இந்த காட்சி பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தனர், ஆனால் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
இது தொடர்பாக தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஆர்யன் ரெட்டியின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது உடலை தமிழகத்திற்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
பிறந்தநாளின் போது ஏற்பட்ட இந்த துயர சம்பவம் அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva