இந்திய விவசாயிகளுக்கு இலங்கையிலிருந்து வந்த ஆதரவு! – யாழ்பாணத்திலும் போராட்டம்!

Srilanka
Prasanth Karthick| Last Modified புதன், 27 ஜனவரி 2021 (10:37 IST)
இந்திய குடியரசு தினத்தில் விவசாயிகள் டிராக்டர் பேரணி போராட்டம் நடத்திய நிலையில் அவர்களுக்கு ஆதரவாக இலங்கையிலும் போராட்டம் நடந்துள்ளது.

நேற்று இந்திய குடியரசு தினம் கொண்டாடப்பட்ட நிலையில் தலைநகர் டெல்லியில் விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டிராக்டர் பேரணியை நடத்தினர். தடையை மீறி பேரணி நடத்தியதால் அங்கு கலவரம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் இந்திய விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இலங்கையிலும் போராட்டம் நடந்துள்ளது. தேசிய ஒத்துழைப்பு மீனவர்கள் சார்பில் யாழ்பாணத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பலர் கலந்து கொண்டுள்ளனர். அந்த போராட்டத்தின் மூலமாக விவசாயிகள் கோரிக்கைகளுக்கு இந்திய அரசு செவிசாய்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :