”சீனர்களுக்கு விசா ரத்து”.. இலங்கை அதிரடி
இலங்கையில் கொரனா வைரஸால் ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் சீனப் பயணிகளுக்கு விசா வழங்குவதை ரத்து செய்துள்ளது.
சீனாவில் கொரனா வைரஸ் பரவி வரும் நிலையில் இதுவரை 106க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே கடந்த ஜனவரி 19 ஆம் தேதி சீனாவில் இருந்து இலங்கை வந்த சீன பெண் ஒருவருக்கு கொரனா வைரஸ் உள்ளதாக கண்டறியப்பட்டது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இதனை தொடர்ந்து சீனப்பயணிகளுக்கு வருகை தந்தவுடன் விசா (Visa on arrival) வழங்கும் கொள்கையை ரத்து செய்துள்ளது இலங்கை அரசு.