ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 8 நவம்பர் 2020 (11:38 IST)

இந்திய மீனவர்களின் விசைப்படகுகளை அழிக்க இலங்கை நீதிமன்றம் அனுமதி!

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை எல்லை தாண்டி வந்து மீன் பிடித்த இந்திய மீனவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் அந்த படகுகளை அழிக்க அந்நாட்டு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக அவ்வப்போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டும் அவர்களுடைய படகுகள் பறிமுதல் செய்யப்பட்டும் வருவது கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது
 
இந்த நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை 121 இந்த மீனவர்களின் விசைப் படகுகள் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அந்த படகுகளை என்ன செய்வது என்பது குறித்த நீதிமன்ற வழக்கில் தற்போது நீதிமன்றம் ஒரு முடிவுக்கு வந்துள்ளதாகவும் தெரிகிறது
 
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்ததாக 2015 முதல் 2018 வரை பறிமுதல் செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் 121 விசைப்படகுகளை அழிக்க அனுமதி அளிப்பதாக அந்நாட்டு நீதிமன்றம் தெரிவித்து உள்ளது இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது