செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 27 ஜூன் 2022 (08:47 IST)

கேளிக்கை விடுதி சென்ற 21 சிறுவர்கள் மர்ம மரணம்! – தென் ஆப்பிரிக்காவில் பரபரப்பு!

South Africa
தென் ஆப்பிரிக்காவில் கேளிக்கை விடுதிக்கு மது அருந்த சென்ற சிறுவர்கள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென் ஆப்பிரிக்க நாட்டின் தெற்கு நகரமான கிழக்கு லண்டனில் தனியார் இரவு கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. அந்த பகுதியை சேர்ந்த பள்ளி சிறுவர்கள் சிலர் தாங்கள் தேர்வில் தேர்ச்சி அடைந்ததை கொண்டாடுவதற்காக அந்த இரவு நேர கேளிக்கை விடுதிக்கு சென்றுள்ளனர்.

அங்கு அவர்கள் மது அருந்தியதாக கூறப்படுகிறது. அங்கு அவர்கள் 21 பேரும் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். 21 சிறுவர்களும் 12 வயது முதல் 17 வயதுக்கு உட்பட்டவர்கள். இவர்கள் அருந்திய மதுவில் விஷம் கலக்கப்பட்டதா அல்லது மரணத்திற்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.