புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 28 ஜனவரி 2019 (20:50 IST)

இனி இஷ்டத்திற்கு பதிவு செய்ய முடியாது: ஃபேஸ்புக், டுவிட்டர், யூடியூபில் கட்டுப்பாடு

சமூக வலைத்தளங்களில் எந்த அளவுக்கு பயன் இருக்கின்றதோ, அதே அளவுக்கு ஆபத்தும் உள்ளது என்பதும் இதனை கட்டுப்படுத்துவது என்பது எளிதான காரியம் இல்லை என்பதும் பலருக்கும் புரிந்திருக்கும். ஒரு கருத்துக்கு மாற்றுக்கருத்து கூறுபவர்களுடன் ஆக்கபூர்வமாக வாதிடாமல் உடனே கெட்ட வார்த்தையை பதிலாக அளிக்கும் வழக்கம் அதிகரித்து வருகிறது.

அதுமட்டுமின்றி பெய்டு டிராக்கர்கள் தங்கள் இஷ்டத்திற்கு கற்பனை குதிரைகளை ஓட்டிவிட்டு போஸ்ட்டுகளை பதிவு செய்கின்றனர். குறிப்பாக ஒரு திரைப்படம் ரிலீஸ் ஆனவுடன் தயாரிப்பாளருக்கே தெரியாத வசூல் கணக்கை பெய்டு டிராக்கர்கள் பதிவு செய்கின்றனர்.

இந்த நிலையில் சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், டுவிட்டர் மற்றும் யூடியூப் ஆகியவை இதுகுறித்து சில கட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிட்ட்டு வருகின்றன. இனி பொய் அல்லது தவறான தகவல் என்று உறுதி செய்யப்பட்ட செய்திகளை ஊக்குவிக்க மாட்டோம் என்றும் தவறான தகவல்கள் தருபவர்களின் கணக்குகளை தற்காலிகமாக முடக்கி வைக்க ஆலோசனை செய்து வருவதாகவும் சமூக வலைத்தள நிர்வாகிகல் தெரிவித்துள்ளனர். மேலும் வாடிக்கையாளர்கள் 'தேவை இல்லை' என்று பரிந்துரைக்கும் பதிவுகள், வீடியோக்கள் அவர்களுக்கு அளிக்கப்படாது என்றும் சமூக வலைத்தளங்கள் தெரிவித்துள்ளது.