வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 23 ஜனவரி 2020 (14:41 IST)

பாம்பிடம் இருந்து பரவியதா கொரோனா வைரஸ்? ஆய்வு முடிவுகள் கூறுவது என்ன?

கொரோனா வைரஸ் பாம்பின் மூலம் மனிதர்களுக்குப் பரவியிருக்கலாம் என ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. 
 
மனிதர்கள் இதுவரை கண்டிராத வைரஸ் ஒன்று சீனாவில் வேகமாக பரவி வருவதால், அதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் சீன அதிகாரிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர். 
 
கொரோனா வைரஸ் வகையை சேர்ந்த இந்த வைரஸால் சீனாவில் இதுவரை  17 பேர் உயிரிழந்துள்ளனர். 550க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அமெரிக்காவிலும் ஒருவருக்கு இந்த வைரஸ் பரவி இருப்பது தெரிய வந்துள்ளது. 
 
சீனாவில் பரவத் தொடங்கிய இந்த வைரஸ் அமெரிக்கா, ஜப்பான், வடகொரியா, தென்கொரியா, தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளுக்கும் பரவியுள்ளது. சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் ரஷ்யாவில் பரவினால் தடுப்பூசியை கண்டுபிடிக்க 6 மாதங்களாகும் என ரஷ்ய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
 
இந்நிலையில், இந்த கரோனா வைரஸ் எங்கிருந்து பரவியது என்பது குறித்து சீனாவில் பெக்கிங் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தினர்.
 
அதில்,  இந்த கரோனா வைரஸ், பாம்புகளில் இருந்து மனிதர்களுக்குப் பரவியிருக்கலாம் என தெரிகிறது. பாம்புகளின் உடலில் இருக்கும் செல்களும், இந்த வைரஸில் உள்ள செல்களுக்கும் அதிகமான ஒற்றுமை இருக்கின்றன. இதனால், இந்த வைரஸ் பாம்பின் மூலம் மனிதர்களுக்குப் பரவியிருக்கலாம் எனத் தெரியவருகிறது தெரிவித்துள்ளனர்.