திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 12 ஜூலை 2024 (11:29 IST)

தினமும் ஒரு தடவையாவது சிரிச்சே ஆகணும்! கட்டாய சட்டம் போட்ட ஜப்பான்! ஏன் தெரியுமா?

Laugh

ஜப்பான் நாட்டின் யமகட்டாவில் தினசரி சிரிப்பதை கட்டாயமாக்கி புதிய சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது வைரலாகியுள்ளது.

மற்ற விலங்குகளிடம் இல்லாத மனிதர்களிடம் உள்ள பண்புகளில் ஒன்று சிரிப்பது. தினசரி சிரித்து மகிழ்ச்சியாக இருப்பது உடல்நலத்தை காக்கவும், நீண்ட ஆயுளுக்கும் உதவும் என ஆய்வுகள் கூறுகின்றன. ஒரு நகைச்சுவையை கண்டு சிரிப்பதால் மன அழுத்தங்கள் குறைந்து இதயம் சார்ந்த பிரச்சினைகளை வராமல் தடுக்கிறது.

சமீபத்தில் ஜப்பானின் யமகட்டா மாகாண மருத்துவ பல்கலைக்கழகம் மேற்கொண்டு அறிவியல் ஆய்வில் தினசரி சிரிப்பவர்களுக்கு மாரடைப்பின் அபாயங்கள் குறைவதாக தெரிய வந்துள்ளது. மேலும் சிரிப்பது மன அழுத்தம், பதற்றம் போன்றவற்றையும் பெருமளவில் குறைப்பதாக தெரிய வந்துள்ளது.
 

இதையடுத்து யமகட்டா மாகாணத்தில் தினசரி அனைவரும் ஒரு முறையாவது கட்டாயமாக சிரிக்க வேண்டும் என புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு மாதத்தில் எட்டாவது நாளையும் சிரிப்பு தினமாக கடைபிடித்து அன்றைய தினம் சிரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த கட்டாய சட்டத்தை ஜப்பானிய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. சிரிப்பது என்பது தனிநபர் உரிமை சார்ந்தது என்றும், அதை கட்டாயப்படுத்தி செய்ய சொல்ல முடியாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். 

Edit by Prasanth.K