ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 4 ஜூலை 2018 (11:54 IST)

கொளுத்தும் வெயிலுக்கு 6 பேர் பலி: கனடாவில் சோகம்

கனடாவில் கொளுத்தும் வெயிலுக்கு 6 பேர் பலியாகியுள்ள சம்பவம் அங்கு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கனடாவில் கடுமையாக வெயில்  சுட்டெரித்து வருகிறது. இதனால் அந்நாட்டின்  மேற்குக் கடலோரப் பகுதி முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு வாழும் மக்கள் வெயிலினால் கடுமையான இன்னல்களை அனுபவித்து வருகின்றன.  
 
மேலும், அங்கு காட்டுத் தீ சில நாட்களாக இடைவிடாமல் கொழுந்து விட்டு எரிந்து வருகிறது. இதனால் அங்கு கடும் புழுக்கம் ஏற்பட்டுள்ளது. மத்திய கனடாவில் அமைந்துள்ள மாண்ட்ரியல் நகரில் கொளுத்தும் வெயிலுக்கு இதுவரை 6 பேர் பலியாகியுள்ளனர்.
 
வெயிலின் தாக்கத்தில் இருந்து விடுபட அங்கிருக்கும் மக்கள் நீச்சள் குளங்களை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். மேலும், மக்கள் வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்க வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.