திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 4 அக்டோபர் 2024 (11:27 IST)

ஒரே பெண்ணுக்கு 20 முறை திருமணம்.. சுற்றுலா பயணிகளின் பலிகடா ஆகும் இளம்பெண்கள்..!

இந்தோனேசியாவுக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஏழை இளம் பெண்களை தற்காலிகமாக திருமணம் செய்து வைப்பதாகவும், அந்த வகையில் ஒரே பெண்ணுக்கு 20 முறை கூட திருமணம் செய்து வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேசியா நாட்டிற்கு உலக நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து கொண்டிருக்கும் நிலையில், சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக அவர்கள் தங்கி இருக்கும் காலம் வரைக்கும் தற்காலிக திருமணங்கள் அதிகம் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

வாரக்கணக்கில் அல்லது மாதக்கணக்கில் சுற்றுலா பயணிகள் தங்கி இருக்கும் வரை இந்த தற்காலிக திருமணம் நடைமுறையில் இருக்கும் என்றும், அவர்கள் தங்கி இருக்கும் வரை ஏழை இளம் பெண்கள் அவர்களுக்கு மனைவியாக வாழ்ந்து, அதன் பின் சுற்றுலா முடிந்து, சுற்றுலா பயணிகள் தங்கள் சொந்த நாட்டுக்கு திரும்பும் போது அந்த திருமணம் ரத்து செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.

பல இளம் பெண்கள் அவர்களது பெற்றோர்களாலே இந்த தற்காலிக திருமணத்திற்கு கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் என்றும், பல இளம் பெண்களுக்கு 20 முறை கூட சுற்றுலா பயணிகளுடன்  திருமணம் நடந்து இருப்பதாகவும் கூறப்படுவது உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Edited by Mahendran