புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: வெள்ளி, 25 அக்டோபர் 2019 (16:31 IST)

”ஹேப்பி தீபாவளி” வாழ்த்துகள் கூறும் ஆஸ்திரேலிய பிரதமர்..

தீபாவளி பண்டிகை வருவதையொட்டி ஆஸ்திரேலிய பிரதமர் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

வருகிற 27 ஆம் தேதி தீபாவளி பண்டிகை வருவதையொட்டி இந்தியர்கள் பலகாரம், பட்டாசு என கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் ஆச்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரீஸன் டிவிட்டரில்  தீபாவளி வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட காணொலியில், முதலில் ஹிந்தியில் வணக்கம் என கூறி தொடங்குகிறார். அதன் பிறகு ”நான் தீபாவளியை மிகவும் விரும்புகிறேன். ஏனென்றால் நமது நம்பிக்கையையும் மதிப்புகளையும் பகிரக்கூடிய தினம் தீபாவளி. ஆஸ்திரேலியா பல்வேறு நாட்டு மக்களையும் கலாச்சாரங்களையும் கொண்டுள்ள நாடு. இந்த தீபாவளியை நாங்கள் மிகவும் எங்கள் வாழ்க்கையிலிருந்தே நேசிக்கிறோம்.  அனைவருக்கு தீபாவளி வாழ்த்துகளை கூறிகொள்கிறேன்” என கூறியுள்ளார்.

இந்திய மக்கள் கொண்டாடும் பண்டிகையான தீபாவளிக்கு ஆஸ்திரேலிய பிரதமர் வாழ்த்துகள் தெரிவித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.