1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 14 ஆகஸ்ட் 2019 (15:04 IST)

டைட்டானிக் கப்பல் மூழ்கிய காலத்தில் வாழ்ந்த சுறா! இன்னும் உயிரோடுதான் இருக்கு...

டைட்டானிக் காலத்தில் வாழ்ந்த சுமார் 512 வயதுடைய கீரின்லாந்த் சுறா ஒன்று மீனவர்களின் வலையில் சிக்கியுள்ளது. 
 
வடக்கு அட்லாண்டிக் கடல் பகுதியில் மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது இவர்களின் வலையில் 28 கீர்ன்லாந்த் சுறாக்கள் பிடிப்பட்டுள்ளது. அதில், 512 வயது சுறா ஒன்றும் இருந்துள்ளது. 
 
கிரீன்லாந்து சுறாக்கள் வருடம் ஒரு செ.மீ வளரும். அதேபோல் பல நூறு ஆண்டுகள் வாழும். இந்த சுறா 18 அடி உள்ளது, அதேபோல் எப்படியும் 272 முதல் 512 வயது இருக்கும் இந்த சுறாவுக்கு. மேலும், இது முதிர்ந்த முதுகெலும்பு கொண்ட உயிரினாமாக உள்ளது. 
 
இந்த வகை சுறா நெப்போலியன் போர் மற்றும் டைட்டானிக் கப்பல் முழ்கிய சமயத்திலும் வாழ்ந்திருக்க கூடும். இந்த சுறாவை வைத்து மேலும் பல ஆய்வுகளையும் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.