செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 7 செப்டம்பர் 2022 (20:33 IST)

சவுக்கு சங்கர் தற்கொலை முயற்சியா? அவரே பதிவு செய்த டுவிட்!

savukku
சவுக்கு சங்கர் தற்கொலை முயற்சி செய்ததாக வாட்ஸ் அப்பில் வதந்திகள் பரவி வரும் நிலையில் ஆன்மா சாந்தியடையட்டும் என சவுக்கு சங்கர் தனது டுவிட்டரில் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
அரசியல் விமர்சகரும் பத்திரிகையாளருமான சவுக்கு சங்கர் பல்வேறு பேட்டிகளில் ஆளும் கட்சி உள்பட அனைத்துக் கட்சிகளையும் சரமாரியாக விமர்சனம் செய்து வருவார் என்பது தெரிந்ததே 
 
அவர் மீது பல வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த சில மணி நேரங்களாக சவுக்கு சங்கர் விஷம் அருந்தி தற்கொலை செய்ய முயற்சி செய்ததாகவும் இதனை அடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வதந்தி ஒன்று பரவி வருவகிறது.
 
இதுகுறித்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்த சவுக்கு சங்கர் ஆன்மா சாந்தி அடையட்டும் என்று கிண்டலாக பதிவு செய்துள்ளார். அவருடைய இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது