செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 2 செப்டம்பர் 2023 (13:04 IST)

சாவோலா புயல் : 3 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்

பிலிப்பைன்ஸ் நாட்டில் வெப்ப மண்டல புயல் காரணமான சுமார் 3 லட்சத்து 87 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் பாங்பாங் மார்கோஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.

சீனாவின் தெற்குப் பகுதியில் வெப்ப மண்டல  புயலான சாவோலா உருவானது. இந்தப்  புயல் காரணமாக  பிலிப்பைன்ஸ் நாட்டில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில், மத்திய பில்லிப்பைன்ஸ் மற்றும் லூசோன் தீவுகளில் கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள வீடுகள் சேதமடைந்தன.

இதில் ஒருவர்உயிரிழந்ததாக தகவல் வெளியாகிறது.  எனவே முன்னெச்சரிக்கையாக  சுமார் 3 லட்சத்து 87 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டனர்.

இந்த புயல் கரையக் கடந்தும் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அங்குள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் ‘பிலிப்பைன்ஸ் நோக்கி மேலும் ஒரு வெப்ப மண்டல  புயல் வரும்’ என்று எச்சரித்துள்ளது.