1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 30 அக்டோபர் 2017 (16:39 IST)

விளையாட்டு மைதானங்களுக்கு பெண்களை அனுமதிக்க சவுதி அரேபியா முடிவு

வரும் 2018ஆம் ஆண்டு முதல் விளையாட்டு மைதானங்களுக்கு பார்வையாளர்களாக பெண்களை அனுமதிக்க சவுதி அரேபியா அரசு முடிவு செய்துள்ளது.


 

 
சவுதி அரேபியா அரசு தற்போது பெண்களுக்கு உரிமை வழங்குவதில் ஆர்வம் செலுத்தி வருகிரது. பெண்களுக்கு கடுமையான சட்டம் இருந்து வந்த சவுதி அரேபியா நாட்டில் தற்போது மெல்ல மெல்ல சட்டம் தளர்ந்து வருகிறது. அண்மையில் பெண்களுக்கு கார் ஓட்டும் உரிமம் வழங்க முடிவு செய்தது அதற்கான ஆணையும் வெளியிடப்பட்டது. 
 
தற்போது விளையாட்டு மைதானங்களுக்கு பெண்களை பார்வையாளர்களாக அனுமதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. விஷன் 2030 என்ற திட்டம் உருவாக்கப்பட்டு பொருளாதாரம் மற்றும் சமூக சீர்திருத்தங்களை மேற்கொள்ள அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 
 
அதன்படி பெண்கள் வேலைவாய்ப்பை ஊக்கப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் பள்ளிகளில் மாணவிகள் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது. சவுதி அரேபியாவின் இந்த செயல்களுக்கு உலகம் முழுவதும் உள்ள பெண் உரிமை அமைப்புகள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.