வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 24 மார்ச் 2022 (07:15 IST)

ஐநாவில் ரஷ்யாவின் தீர்மானம் தோல்வி: இந்தியா வாக்களிக்காமல் நடுநிலை!

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா கொண்டு வந்த தீர்மானம் தோல்வி அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
உக்ரைனில் மனித உரிமை விவகாரம் குறித்து ரஷ்யா தீர்மானம் கொண்டு வந்தது. ரஷ்யா கொண்டு வந்த தீர்மானத்தில் உக்ரைன் மீதான போரை குறிப்பிடவில்லை
 
ரஷ்யா கொண்டு வந்த தீர்மானத்தின் மீது இந்தியா வாக்களிக்கவில்லை என்பதும், மொத்தம் உள்ள 15 நாடுகளில் ரஷ்யா, சீனா மட்டுமே ஆதரவாக வாக்களித்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 13 நாடுகள் வாக்களிக்காமல் நடுநிலை வகித்ததால் ரஷ்யா கொண்டு வந்த தீர்மானம் தோல்வி அடைந்தது.