திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 4 மார்ச் 2022 (13:51 IST)

இந்தியர்களை மீட்க நாங்களே உதவுறோம்! – ரஷ்யா அறிவிப்பு!

ரஷ்யா போர் தொடர்ந்துள்ள உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்க உதவுவதாக ரஷ்யாவே தெரிவித்துள்ளது.

உக்ரைனில் ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி நகரங்களை கைப்பற்றி வரும் நிலையில் அங்குள்ள இந்திய மாணவர்கள் அண்டை நாடுகளுக்கு தப்பி சென்று அங்கிருந்து இந்தியாவை வந்தடைந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்கள் முன்னதாக இந்திய மாணவர் நவீன் ரஷ்ய ராணுவத்தின் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க உதவுவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்தியர்கள் மட்டுமல்லாமல் பிற நாட்டினரையும் சேர்த்து வெளியேற்ற 130 பேருந்துகளை இயக்க உள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. வெளியேற்றப்படும் மக்களுக்கு தேவையான உணவு, குடிநீரும் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது.