ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 29 ஜூன் 2021 (09:53 IST)

கூகிள் மேல 3, பேஸ்புக் மேல 2…! அடுத்தடுத்து புகார்கள்! – கிடுக்கு பிடி போடும் ரஷ்யா!

இந்தியாவில் சமீபத்தில் சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்ட நிலையில் ரஷ்யாவிலும் சமூக வலைதளங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

தொழில்நுட்ப வசதிகள் வளர்ச்சியால் உலகம் முழுவதும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதள பயன்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில் ஒவ்வொரு நாட்டளவிலும் சமூக வலைதளங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் இந்தியாவிலும் சமூக வலைதளங்களுக்கு பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

அந்த வகையில் ரஷ்யாவில் உள்விவகாரங்கள் குறித்த சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்காததாக கூகிள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள், இணையதளங்கள் மீது வழக்குப்பதியப்பட்டு உள்ளது. கூகிள், டெலிகிராம் நிறுவனம் மீது 3 வழக்குகள், பேஸ்புக், ட்விட்டர் மீது தலா 2 வழக்குகள் ரஷ்யாவில் உள்ளது. இவற்றால் இந்நிறுவனங்கள் பெரும் தொகையை அபராதமாக செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படலாம் என கூறப்படுகிறது. இது சமூக வலைதளங்கள் செயல்படுவதில் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.