ரஷ்ய மக்கள் வெளிநாடுகளுக்கு பணம் அனுப்ப தடை: அதிரடி உத்தரவு
கடந்த சில நாட்களாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ரஷ்யா மீது அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன
மேலும் பொருளாதார தடை, ஏற்றுமதி இறக்குமதி செய்ய தடை, விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள தடை, வான்வெளியில் ரஷ்ய விமானங்கள் பறக்க தடை என பல்வேறு தடைகளால் ரஷ்யா நிலைகுலைந்து போயுள்ளது
இந்த நிலையில் ரஷ்ய மக்கள் வெளிநாடுகளுக்கு பணம் அனுப்ப தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
ரஷ்யாவுக்கு எதிராக உலக நாடுகளின் பொருளாதார தடைகள் விதிக்கப் பட்டுள்ள நிலையில் ரஷ்யாவின் பணம் வெளிநாடு செல்லாமல் இருக்கும் நடவடிக்கையாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது