மந்திரி பதவியை ராஜினாமா செய்த சகோதரர் ...நன்றி கூறிய பிரிட்டன் அதிபர் .. என்ன நடந்தது ?

jo
Last Modified வியாழன், 5 செப்டம்பர் 2019 (21:14 IST)
சூரியனே அஸ்தமிக்காத நாடு என்ற பெருமை இங்கிலாந்துக்கு உண்டு. ஒரு காலத்தில் உலகையே தங்கள் காலனியாதிக்கத்தின் கீழ் கொண்டுவந்து ஆளுகை செய்தனர். இன்று அவர்களின் நாடு பெரும் பொருளாதார மந்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்தாட்டு பிரதமராக  சமீபத்தில் பதவியேற்ற போரிஸ் ஜான்சன், பல முக்கிய முடிவுகள் எடுத்து வருகிறார்.  இன்னும் சில காலத்தில் பழைய இங்கிலாந்து நாட்டை கட்டி எழுப்பி வல்லரசாக்குவேன் என கூறிவருகிறார்.
 
இந்நிலையில், அவரது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அவரது தம்பி இளைய தம்பி ஜோ மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாகத் தெரிவித்துள்ளார். 
 
அதற்கு ஜான்சன் , தம்பி ஜான் நல்ல திறமையானவர் மற்றும் நல்ல நாடாளுமன்றவாதி எனத் தெரிவித்ததாக அவரது செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
 
ஜோ - அமைச்சரவையில் இருந்து விலக முக்கிய காரணம் ,  ஐரோப்பியக் கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு, பிரதமர் ஜான்சன் மேற்கொண்ட முயற்சிகள் எல்லாம் தோல்வியடைந்ததுதான் என அந்தாட்டு பத்திரிக்கைகள் தகவல் தெரிவித்துள்ளன.


இதில் மேலும் படிக்கவும் :