செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 8 நவம்பர் 2022 (10:41 IST)

பருவகால மாற்ற மாநாட்டில் பாதியிலேயே வெளியேறிய ரிஷி சுனக்: என்ன காரணம்?

rishi sunak
பருவகால மாற்ற மாநாட்டில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் திடீரென பாதியில் எழுந்து சென்றதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
பருவகால மாற்றமாநாடு எகிப்து நாட்டில் தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் இந்த மாநாட்டில் பல உலக தலைவர்கள் கலந்து கொண்ட நிலையில் இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக சமீபத்தில் பதவியேற்ற ரிஷி சுனக் அவர்களும் கலந்துகொண்டார் 
 
இதனிடையில் பருவகால மாற்ற மாநாடு நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தபோது திடீரென பாதியிலேயே ரிஷி சுனக் வெளியேறினார். இதனால் பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர் 
 
பருவகால மாற்ற மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ரிஷி சுனக் உதவியாளர் ஒருவர் அவரிடம் ஏதோ கூறினார் என்றும் அதனால் ரிஷி சுனக் அவசரமாக வெளியேறியதாகவும் கூறப்படுகின்றது 
 
பருவகால மாற்ற மாநாட்டிலிருந்து ரிஷி சுனக் வெளியேறி இதற்கான காரணம் எதுவும் இன்னும் தெரியவில்லை. திடீரென அவர்  பாதியில் வெளியேறியதால் உலக தலைவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது
 
Edited by Siva