1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Ilavarasan
Last Updated : வியாழன், 16 அக்டோபர் 2014 (18:54 IST)

விமான கழிவறையில் பெண் பயணி பாலியல் பலாத்காரம்

ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் ஹொனலு என்ற சர்வதேச விமானநிலையத்தில் இருந்து ஹவாய் நோக்கி சென்று கொண்டிருந்தது.
 
அப்போது அந்த விமானத்தில் மைக்கேல் என்ற பயணி ஓடும் விமானத்தில் சக பெண் பயணியை பாலியல் பலாதகாரம் செய்ததால் அவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 
இது குறித்து ஜப்பான் சர்வதேச ஏர்லைன்ஸ் விமான அதிகாரி ஒருவர் கூறியதாவது;
 
ஜப்பான் ஏர்ல்லைன்ஸ் விமானம் ஜப்பானில் உள்ள ஹொனலு என்ற சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஹவாய் நோக்கி விமானம் சென்று கொண்டிருந்தது. அப்பொது சக பெண் பயணி கழிவறைக்கு சென்றுள்ளார்.
 
இதனை பார்த்த மைக்கேல் சக பெண் பயணியை கழிவறையில் வைத்து உள்பக்கமாக பூட்டி கொண்டார் அதிர்ச்சி அடைந்த சக பெண் பயணி கத்தி கூச்சலிட்டார். சுமார் 45 நிமிடம் அந்த பெண் மைக்கேலிடம் போராடி உள்ளார். இதனால் தனது கற்பை காப்பாற்றிக் கொள்ள மைக்கேலின் வலது கன்னத்தில் அறைந்துள்ளார்.
 
பெண் பயணியின் தாயார் விமான பெண்ணிடம் புகார் தெரிவித்தார். சக பயணிகளின் உதவியுடன் கழிவறையின் பூட்டை உடைக்க முற்பட்டனர். மைக்கேலை சக பயணிகள் தாக்க முயன்றனர். அதைத் தடுக்க முயன்ற சபேதே என்ற பயணி படுகாயம் அடைந்தார்.
 
இந்த சம்பவம் பற்றி மைக்கேல் தாயார் கூறியதாவது;
 
மைக்கேல் சற்று மன நலம் சரியில்லாதவர் அவர் விமானம் புறப்படுவதற்கு முன் விமான பணிப்பெண்கள் குளிர்பானம் கொடுக்க முயன்றனர், அதை நான் தடுத்து நிறுத்தினேன் அவர் தற்போது மருந்து உட்கொண்டுள்ளார் அவருக்கு குளிர்பானம் எதுவும் வேண்டாம் என்று கூறிவிட்டேன். சிறிது நேரம் கழித்து மைக்கேல் தூங்கிவிட்டார் நாங்கள் தற்போது பாட்டியை பார்க்க ஹவாய் செல்கிறோம் என்று மைக்கேல் தாய் கூறியுள்ளார்.
 
விமானம் ஹவாய் விமான நிலையத்தில் இறக்கப்பட்டது. விமானத்தில் சகபயணியை பாலியல் பலாத்காரம் செய்ததால் மைக்கேலை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
 
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. குற்றவாளி மைக்கேலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். விசாரணையில் குற்றவாளி, தான் சக பெண் பயணியிடம் தவறாக நடந்ததை ஒப்புக் கொண்டுள்ளார். நீதிமன்றத்தில் விசாரணை நடந்துகொண்டிருக்கும் போது மைக்கேல் பெற்றோரும் மற்றும் சகோதரி யும் நீதிமன்றத்தை விட்டு வெளியேறிவிட்டனர்.
 
அரசு தரப்பில் வாதாடிய வக்கீல், மைக்கேல் மீது பல குற்றசாட்டுகள் நிலுவலையில் உள்ளன என்று கூறினார். அவரே தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். அவர் மனநிலை பாதிக்கபட்டவர் என்று கூறுவது முற்றிலும் உண்மை அல்ல என்று அரசு தரப்பில் வாதாடிய வக்கீல் கூறினார். மேலும் குற்றவாளி மைக்கேல் மீது உள்ள குற்றங்களை கூற அரசு தரப்பு வக்கீல் மறுத்துவிட்டார்.