வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 8 ஜனவரி 2020 (22:00 IST)

பாப்கார்ன் சாப்பிட்டதால் இதய அறுவை சிகிச்சை செய்யும் நிலை: வாலிபருக்கு நேர்ந்த பரிதாபம்

தொடர்ந்து பாப்கார்ன் சாப்பிட ஒரு வாலிபருக்கு இதய நோய் சிகிச்சைக்கான அறுவை சிகிச்சை செய்யும் நிலை ஏற்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 41 வயது ஆடம் என்பவர் தீயணைப்பு வீரராக பணியாற்றி வருகிறார். இவருக்கு டிவி பார்த்துக்கொண்டிருக்கும்போது பாப்கான் சாப்பிடும் பழக்கம் இருந்திருக்கிறது. இந்த நிலையில் ஒரு சில பாப்கார்ன்கள் அவருடைய பல் ஈறில் சிக்கி உள்ளது. இதனை எடுப்பதற்காக அவர் பல் குத்தும் குச்சி, பேனாமுனை, ஒயர் போன்றவற்றை பயன்படுத்தி உள்ளார். இதனால் அவருடைய ஈறு சேதமடைந்து அந்த சேதம் அவருடைய இதயத்தை பாதிக்கும் அளவிற்கு சென்றுள்ளது 
 
அதன் பின்னர் சில நாட்கள் கழித்து அவருக்கு காய்ச்சல் உள்பா பலவிதமான தொந்தரவு ஏற்பட்டதால் அவர் மருத்துவமனை சென்று சோதித்த போது அவருடைய இதயம் பெரிதும் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது. அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருடைய ஈறு சேதமானதால் அதன் விளைவாக இதயத்தில் உள்ள உட்சுவர் தொற்று நோய் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதன் பின்னர் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து அவரை குணப்படுத்தினார்