புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 24 டிசம்பர் 2018 (10:50 IST)

போதையில் படுத்துகிடந்த நபர்: பிணம் என கருதி அடக்க செய்யவிருந்த போலீஸ்

பிரேசிலில் போதையில் படுத்துகிடந்த நபரை போலீஸார் பிணம் என கருதி அடக்கம் செய்யவிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசிலில் சா பாலோ எனும் இடத்தில் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சாலையோரம் கிடந்த ஒரு புதரில் நபர் ஒருவர் படுத்துகிடந்தார். அசைவற்று கிடந்த அந்த நபர் இறந்துவிட்டார் என கருதி போலீஸார் அவரை அடக்கம் செய்ய திட்டமிட்டனர்.
 
அவர் மீது பிணங்களுக்கு போடும் கவரையும் போட்டுவிட்டனர். திடீரென கவர் அசைந்தது. இதைக்கண்டு போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் தான் போலீஸாருக்கு அந்த நபர் போதையில் படுத்து கிடந்தது தெரியவந்தது. சற்று நேரம் தாமதமாகி இருந்தால் இந்நேரம் அவர் டெட்பாடி தான்.