வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 5 டிசம்பர் 2020 (11:43 IST)

சாலையில் இறங்கிய விமானம் - காரில் மோதி பரபரப்பு!

அமெரிக்காவில் விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் சாலையில் இறக்கி நிறுத்தியுள்ளார் விமானி.

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் விமானம் ஒன்று சாலையில் இறங்கி தாறுமாறாக ஓடியது. அப்போது சாலையில் வந்த கார் ஒன்றின் மீது மோதி விமானம் நின்றது. இதில் விமானிக்கோ அந்த காரை ஓட்டிவந்த பயணிக்கோ எந்த பெரிய காயங்களும் ஏற்படவில்லை. இது அந்த பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து நடந்த விசாரணையில் விமானத்தின் எந்திர கோளாறு காரணமாக சிறிய ரக விமானம் என்பதால் விமானி அந்த முடிவை எடுத்துள்ளார். இது சம்மந்தமான காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.