திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 22 ஜூன் 2021 (11:03 IST)

தடுப்பூசி போட்டுக்கலைனா ஜெயில்ல போட்டுடுவேன்! – எச்சரிக்கும் பிலிப்பைன்ஸ் அதிபர்!

பிலிப்பைன்ஸில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள மறுப்பவர்களுக்கு சிறை தண்டனை என்ற அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு தடுப்பூசிகளை கண்டறிந்து மக்களுக்கு செலுத்தி வருகின்றன. பல நாடுகளில் தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை உள்ள நிலையில் பல நாடுகளில் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள தயக்கம் காட்டுவதால் தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களுக்கு பல சலுகைகளையும் சில நாடுகள் அறிவித்து வருகின்றன.

இந்நிலையில் பிலிப்பைன்ஸில் தடுப்பூசி போட்டுக் கொள்ள மறுப்பவர்களுக்கு சிறை தண்டனை அளிக்கப்படும் என அந்நாட்டு அதிபர் ரொட்ரிகோ டுடெர்டோ எச்சரித்துள்ளார். தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்களை கட்டாயப்படுத்த முடியாது என்பதால் பல நாடுகளும் சலுகைகள் அறிவித்து வரும் நிலையில், பிலிப்பைன்ஸின் அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.