வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 4 மே 2019 (11:41 IST)

எரிமலைக்குள் விழுந்த நபர் உயிருடன் மீட்பு: தப்பித்தது எப்படி?

எரிமலையை பார்வையிட சென்ற போது அதற்குள் தவறி விழுந்த நபர் ஒருவரை போலீஸார் உயிருடன் மீட்டுள்ளனர். 
 
ஹவாய் எரிமலை தேசிய பூங்காவில் கீல்வேய கல்டெரா என்ற எரிமலையை பார்வையிட்ட போது ஒருவர் தவறி அதனுள் விழுந்துள்ளார். இதை கண்ட மக்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். 
 
39 வயதான அந்த நபர் அங்கு சென்றபோது, அவர் நடந்த பாதை சிதைந்து, 300 அடி உயரமான அந்த எரிமலையில் விழுந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் விவரிக்கின்றனர்.
 
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் ஹவாயில் உள்ள மிகவும் தீவிர எரிமலையின் 70 அடி ஆழத்தில் விழுந்த அந்த நபரை பலத்த காயங்களுடன் மீட்டுள்ளனர். 
 
அந்த நபர் தீப்பிழம்பில் விழாமல், அங்கிருந்த தொங்கு பாறை ஒன்றில் விழுந்ததால் உயிர் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.