சீனாவில் மக்கள் போராட்டம்...அரசு எடுத்த அதிரடி முடிவு
சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு அங்குள்ள உகான் மாகாணத்தில் கொரொனா பரவியது. இங்கிலிருந்து, உலகம் முழுவதும் கொரோனா பரவி பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியது.
தற்போது ஓரளவு கொரொனா தொற்று குறைந்து வரும் நிலையில், சீனாவில் சமீபத்தில், தொற்று மீண்டும் அதிகரித்தது.
இதனால், தினசரி பாதிப்புகள் அதிகரித்ததால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
எனவே, கொரொனா பரவாமல் தடுக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதில், ஊரடங்கும் விதிக்கப்பட்டதால், மக்கள் இதை எதித்துப் போராடினர்.
இந்த நிலையில், சீனாவில் 47 அரசு மருத்துவமனைகளில் 14 ஆயிரம் காய்ச்சலுக்கான கிளீனிக்குகள், கிராமப்புரங்களில் சில ஆயிரம் கிளீனிக்குகளும் திறக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மக்கள் சிகிச்சை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.