1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 24 மே 2018 (19:51 IST)

பாகிஸ்தான் டிவி நிகழ்ச்சி: பளார் வாங்கிய மந்திரி

பாகிஸ்தானில் உள்ள ஒரு தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் மந்திரி டேனியஸ் அஜீஸை இம்ரான் கட்சி தலைவர் அறைந்துள்ளார்.
 
பாகிஸ்தானில் செயல்பட்டு கொண்டிருக்கும் ஜியோ நியூஸ் தொலைக்காட்சியில் விவாத நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் இம்ரான் கான் கட்சியை சேர்ந்த நீமுல் ஹக், தனியார்மய துறை மந்திரி டேனியல் அஜீஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 
இந்த நிகழ்ச்சி தொடங்கி மந்திரி டேனியஸ் அஜீஸ்க்கும், நீமுல் ஹக்கும் காரசாரமான விவாதம் நடந்து கொண்டிருந்தது. அப்போது மந்திரி, நீமுல் ஹக்கை திருடன் என கூப்பிட்டார். 
 
இதனால் கோபமடைந்த நீமுல் மந்திரியை ஓங்கி கண்ணத்தில் அறைந்தார். இதையடுத்து, நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டது. பின்னர் மந்திரி அஜீஸ் நடந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். இதற்கு நீமுல் தனது டுவிட்டர் பக்கத்தில் நடந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என்றார்.