இந்தியாவை தோற்கடிப்பேன், இல்லையேல் பெயரை மாற்றிக் கொள்வேன்: பாகிஸ்தான் அதிபர்
இந்தியாவை தோற்கடிப்பேன், தோற்கடிக்க முடியாவிட்டால், எனது பெயரை மாற்றிக்கொள்வேன் என பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷரீப் சவால் விடுத்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பிரதமர் ஷபாஸ் ஷரீப் கலந்து கொண்டார். அப்போது, "பாகிஸ்தான் நிலைமையை மேம்படுத்த இரவும் பகலும் பாடுபடுகிறோம். பாகிஸ்தானை கடவுள் எப்போதும் ஆசீர்வதிப்பார். பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவை விட சிறந்த நாடாக பாகிஸ்தான் உருவாகவில்லை என்றால், நான் எனது பெயரை மாற்றிக் கொள்கிறேன்," என்று தெரிவித்தார்.
மேலும், "நான் நவாஸ் ஷரீபின் ரசிகன். அவர் மீது நான் சத்தியம் செய்கிறேன். என் உடம்பில் உயிர் இருக்கும் வரை இந்தியாவை தோற்கடித்து, பாகிஸ்தானை மகத்தான நாடாக மாற்றுவேன். பிற நாடுகள் மற்றும் அமைப்புகள் வழங்கும் கடனை நம்புவதற்குப் பதிலாக, தன்னிறைவு பெற்ற பொருளாதாரம் கொண்ட நாடாக பாகிஸ்தானை உருவாக்குவோம்," என்றும் அவர் கூறினார்.
பொருளாதாரச் சிக்கல்களில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான், பொருளாதாரத்தில் முன்னிலையில் உள்ள இந்தியாவை தோற்கடிப்பேன் என்று பிரதமர் மேடையில் சவால் விடுத்திருப்பதை பலரும் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர்.
Edited by Mahendran