திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 1 மார்ச் 2019 (16:00 IST)

’40 இந்திய வீரர்களைக் ’ கொன்ற தீவிரவாதிக்கு வக்காளத்து வாங்கும் பாகிஸ்தான் !!!

காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா பகுதியில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் சென்று கொண்டிருந்த பேருந்தின் மீது தற்கொலைப்படை தீவிரவாதியின் கார் பயங்கரமாக மோதியதால் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் பேருந்தில் இருந்த 40 இந்திய வீரர்கள் மரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்று கொண்ட நிலையில் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க இந்திய ராணுவம் தயாராகி வந்தது.
புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக கடந்த 26 ஆம் தேதி  காஷ்மீர் ஆக்கிரமிப்பில் முகாமிட்டிருந்த தீவிரவாதிகள் மீது  இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலுக்கு நாட்டிலுள்ள அனைவரும்  பாராட்டுகளைத் தெரிவித்திருந்தார். 
 
இதனையடுத்து கடந்த 27 ஆம் தேதி இந்திய விமானிகள்  பாகிஸ்தானுக்கு எதிராக நடத்திய விமான தாக்குதலில் பாகிஸ்தான் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.
 
ஆனால்  துரதிஷ்ட வசமாக இந்திய விமானி அபிநந்தன்  சென்ற விமானத்தின் மீது பாகிஸ்தான் ராணிவத்தினர் நடத்திய தாக்குதலில் அபிநந்தன் பாகிஸ்தான் நாட்டில் விழுந்தார்.  அவரை பாகிஸ்தான் ராணுவம் சிறை பிடித்தது. தற்போது உலக நாடுகளின் உந்துதல்களால் அபிநந்தனை பாகிஸ்தான் விடுப்பதாக அறிவித்தது.
 
இந்நிலையில் புவாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் தலைவர் தற்போது பாகிஸ்தானில் இருப்பதாக அந்நாட்டு அர்சு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிகிறது.
 
இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறத்துறை ஷா மெஹ்மூத்,கூறியதாவது:
வீட்டை விட்டு வெளியே வரமுடியாத அளவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
 
இருநாட்டின் பதற்றத்திற்குக் காரணமாக ஆசாரை ஏன் அட்ஜி செய்யவில்லை என செய்தியாளர்கள் எழுப்பினர். 
 
அதற்கு அவர் கூறியதாவது:
 
தக்க ஆதாரங்கள் இருந்தால்தான் ஆசாரை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்றுத் தரமுடியும் இவ்வாறு கூறினார்.
 
ஆனால் ஜெய்ஷ் - இ - முகமது தீவிரவாதிகள் இந்த தாக்குதலில் ஈடுபட்டதற்கான ஆவணங்களை இந்தியா பாகிஸ்தானுக்கு அந்நாட்டு தூதர் மூலம் அனுப்பியுள்ளது என்று தெரிகிறது.