வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Murugan
Last Updated : செவ்வாய், 27 செப்டம்பர் 2016 (18:24 IST)

மனைவியுடன் குத்தாட்டம் போட்ட பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் : வைரல் வீடியோ

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப், தனது மனைவியுடன் நடனமாடும் வீடியோ வெளியாகியுள்ளது.


 

 
ராணுவத்தின் மூலம் ஆட்சியை கைப்பற்றியவர் முஷரப். அதன் பின் அவர் தேர்தலில் தோல்வியை தழுவினார். அவர் மீது தேச துரோக வழக்கும் பாகிஸ்தானில் தொடுக்கப்பட்டது. இதனால் சிறிது காலம் வெளிநாட்டில் இருந்தவர் மீண்டும் பாகிஸ்தான் சென்று வழக்கை சந்தித்தார். 
 
இந்நிலையில், அவர் ஒரு நிகழ்ச்சியில் தனது மனைவியுடன் குத்தாட்டம் போடும் வீடியோவை ஹமித் மிர் என்ற பாகிஸ்தான் செய்தியாளர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
 
இதில், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் சவுத்ரி நிசார் அலிகானுக்கு, சவால் விடும்படி முஷரப் ஆடியிருப்பதாகவும், இனி அவர் முதுகு வலியால் அவதிப்படமாட்டார் என்றும் கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த வீடியோ பாகிஸ்தான் நாட்டில் வைரலாக பரவி வருகிறது.