செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 25 ஆகஸ்ட் 2021 (09:01 IST)

”இந்தியாவை எதிர்க்க தலீபான்களோடு கை கோர்ப்போம்??” – பாகிஸ்தான் அரசியல் தலைவர் சர்ச்சை பேச்சு!

ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் இந்தியாவை எதிர்க்க தலீபான்களோடு கூட்டணி என பாகிஸ்தான் ஆளும் கட்சி தலைவர் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியுள்ளதற்கு உலக நாடுகள் பல எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்நிலையில் பாகிஸ்தானில் ஆளும் பிடிஐ கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் நீலம் இர்ஷாத் ஷேக் பேசும்போது, இந்தியாவை எதிர்க்க தலீபான்கள் ஆதரவு தருவதாக தெரிவித்துள்ளதாகவும், தலீபான்கள் உதவியுடன் காஷ்மீரை மீட்போம் என்றும் பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.