1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 21 பிப்ரவரி 2018 (09:20 IST)

பிரதமரை கோமாளியாக சித்தரித்த ஓவியருக்கு சிறைத்தண்டனை

மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்கை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம் செய்த ஓவியருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

 
மலேசியாவின் பிரதமரான நஜிப் ரசாக்கை அந்நாட்டின் பிரபல ஓவியரான பாஹ்மி ரேசா  கோமாளியாக சித்தரித்து ஓவிய வரைந்து அதனை இணையதளத்தில் வெளியிட்டார். இந்த ஓவியம் இணையத்தில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இதனையடுத்து பாஹ்மி ரேசா மீது அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் அவர்மீது பல்வேறு பிரிவுகளில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இறுதியில் அவருக்கு ஒரு மாத சிறைத் தண்டனையும், 7 ஆயிரத்து 700 டாலர் (சுமார் ரூ.5 லட்சம்) அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக பாஹ்மி ரேசா தரப்பு தெரிவித்துள்ளது.
 
தமிழகத்தில் இதேபோல் முதல்வரை கேலிச்சித்திரம் வரைந்த கார்ட்டூனிஸ்ட் பாலா கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.