ஒருநாள் கொரோனா பாதிப்பு: அமெரிக்கா, பிரேசிலைவிட இந்தியாவில் 3 மடங்கு
உலக நாடுகளில் ஒருநாள் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசிலைவிட இந்தியாவில் 3 மடங்கு அதிகமாக உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கடந்த 24 மணி நேரத்தில் .அமெரிக்காவில் 31,867 பேருக்கு கொரோனா பாதிப்பு என்றும், பிரேசிலில் 32,719 பேருக்கு கொரோனா பாதிப்பு என்றும், ஆனால் இந்தியாவில் இந்தியாவில் 91 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாகவும் தகவல் வெளிவந்துள்ளது
மேலும் அமெரிக்காவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 67,81,156 என்பதும், இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 5,018,034 என்பதும், பிரேசிலில் கொரோனா மொத்த பாதிப்பு 4,382,263 என்பதும் குறிப்பிடத்தக்கது
மேலும் உலக நாடுகளில் இந்தியாவில்தான் ஒரே நாளில் கொரோனா மரணங்கள் அதிகம் நிகழ்ந்துள்ளது. ஆனால் அமெரிக்கா, பிரேசில், நாடுகளை ஒப்பிடும்போது மொத்த கொரொனா பலி இந்தியாவில் குறைவு
இந்தியாவில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 82,091 என்பதும், அமெரிக்காவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1,99,947 என்பதும், பிரேசிலில் கொரோனா மரணங்கள் 1,33,119 என்பதும் குறிப்பிடத்தக்கது
அதேபோல் இந்தியாவில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரே நாளில் 82,844 என்பதும், உலக நாடுகளில் இந்தியாவில்தான் அதிக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் குணமடைந்து வருகின்றனர் என்பதும் ஒரு பாசிட்டிவ் செய்தி ஆகும்