1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 5 ஜூன் 2018 (16:01 IST)

வடகொரியா மற்றும் சிரிய அதிபர் சந்திப்பு: அமெரிக்காவிற்கு எதிராக சதியா?

வருகின்ற 12 ஆம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்பும், வடகொரிய அதிபர் கிம்மும் சிங்கப்பூரில் நடைபெறும் உச்சி மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர். தற்போது புதிதாக வடகொரியா மற்றும் சிரிய அதிபர் சந்திப்பு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத் தங்கள் நாட்டுக்கு வருகை தர  இருப்பதாக வடகொரியா தெரிவித்துள்ளது. இதனை அந்நாட்டு அரசு ஊடங்களும் உறுதி செய்துள்ளன. 
 
அதேபோல், சிரிய அதிபரும் நான் வடகொரியாவுக்கு செல்ல இருக்கிறேன். அந்நாட்டு அதிபர் கிம்முடன் எனது சந்திப்பு நடைபெறுகிறது என அறிவித்துள்ளார். 
 
இதற்கு முன்னர் சிரிய உள்நாட்டுப் போரில் ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டதற்கு வடகொரியா உதவியதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது.
 
இந்நிலையில் இவர்களது சந்திப்பு இதை உறுதிப்படுத்தும் விதமாகவும், சிரியாவை அமெரிக்கா கடுமையாக எதிர்த்து வரும் நிலையில், இந்த அறிவிப்பு அமெரிக்காவிற்கு எதிரான ஒன்றாக கருதப்படுகிறது.