திங்கள், 17 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 2 ஜூன் 2021 (08:50 IST)

கொரோனா மரணம் இல்லாத நாள்… இங்கிலாந்து நிம்மதி பெருமூச்சு!

கொரோனா மரணம் இல்லாத நாளாக நேற்று இங்கிலாந்தில் ஒரு நாள் பதிவாகியுள்ளது.

கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது. கடந்த ஆண்டு மார்ச் 20 ஆம் தேதி முதல் அங்கு கொரோனா மரணங்கள் பதிவாகி வருகின்றன. இந்நிலையில் அதன் பின்னர் வந்த ஒரு நாள் கூட கொரோனா மரணங்கள் இல்லாத நாளாக அமையவில்லை.

இந்நிலையில் ஒரு ஆண்டு இரண்டு மாதங்கள் கழித்து நேற்று இங்கிலாந்தில் கொரோனா மரணமே இல்லை என்று பதிவாகியுள்ளது. இதனால் இங்கிலாந்து மக்களும் அரசும் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர்.  ஆனால் இப்போது இங்கிலாந்தில் கொரோனா மூன்றாவது அலைக்கான அறிகுறிகள் தென்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.