நியோகோவ் வைரஸ் மனிதர்களுக்கு பரவுமா? உலக சுகாதார மையம்
நியோகோவ் வைரஸ் மனிதர்களுக்கு பரவுமா? உலக சுகாதார மையம்
உலகம் முழுவதும் தற்போது ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் புதியதாக நியோகோவ் என்ற வைரஸ் பரவி வருவதாக சீன விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
தென்னாப்பிரிக்காவில் வவ்வால்கள் இடையே நியோகோவ் யோகம் என்ற புதிய வைரஸ் பரவி வருவதாகவும் அது மெர்ஸ் என்ற வைரஸ் போன்றே அதிகமாக தாக்கும் திறன் தற்போதைய கொரோனா வைரஸை போலவே பல மடங்கு வேகமாக பரவும் தன்மை கொண்டது என்றும் சீனாவின் விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தனர்
ஆனால் இந்த நியோகோவ் வைரஸ் மனிதர்களுக்கு பரவும் வாய்ப்பு இப்போதைக்கு இல்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது சற்று ஆறுதலாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
ஆனால் அதே நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் நியோகோவ் வைரஸ் அல்லது இது போன்ற வைரஸ் மனிதர்களுக்கு பரவும் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.