திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 8 பிப்ரவரி 2023 (07:53 IST)

துருக்கி பூகம்பம்: தொப்புள் கொடியுடன் பச்சிளங்குழந்தை உயிருடன் மீட்பு..!

turkey baby
துருக்கி பூகம்பம்: தொப்புள் கொடியுடன் பச்சிளங்குழந்தை உயிருடன் மீட்பு..!
துருக்கி மற்றும் சிரியாஆகிய இரண்டு நாடுகளில் மிகப்பெரிய பூகம்பம் ஏற்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்த நிலையில் தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
 
 துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக இடுபாடுகளுக்கு இடையே சிக்கிய மக்களை மீட்பு பணியினர் மீட்பு நடவடிக்கையில் இருந்தபோது குழந்தை ஒன்றும் அழும் சத்தம் கேட்டது. 
 
இதனை அடுத்து அங்கு சென்று பார்த்த போது தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத குழந்தை ஒன்று உயிருடன் இருந்ததை கண்டுபிடித்தனர். இதனை அடுத்து உடனடியாக அந்த குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தற்போது அந்த குழந்தை நலமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
இடிபாடுகளுக்கு இடையே கர்ப்பிணி தாய் ஒருவர் குழந்தையை பெற்று விட்டு உயிர் இழந்துள்ளதாகவும் ஆனால் குழந்தை மற்றும் அதிசயமாக உயிர் பிழைத்துள்ளதாகவும் மீட்புபடையினர் தெரிவித்துள்ளனர்
 
Edited by Siva