திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Arun Prasath
Last Updated : புதன், 1 ஜனவரி 2020 (12:31 IST)

நாசாவின் மார்ஸ் ரோவர்; கனவு திட்டத்தை நோக்கி தீவிரம்

மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பும் கனவு திட்டத்தை நோக்கி தீவிரமாக செயலாற்றிக் கொண்டிருக்கும் நாசா, 2020 ஆம் ஆண்டு செவ்வாய்க்கு அனுப்பவிருக்கும் மார்ஸ் ரோவரை அறிமுகப்படுத்தியுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழக்கூடிய சூழல் உள்ளதா? என தீவிர ஆய்வை மேற்கொண்டு வருகிறது நாசா. இதற்காக Path finder, curiosity போன்ற ஆய்வு வாகனங்களை ஆராய்ச்சி செய்ய அனுப்பியுள்ளது.

இந்நிலையில் செவ்வாயில் மனிதர்கள் வாழக்கூடிய சூழல் உள்ளதா? என்பதை ஆராய வருகிற 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நாசா செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பவுள்ள மார்ஸ் ரோவரை தற்போது அறிமுகம் செய்துள்ளது. 6 சக்கரங்கள் கொண்ட இந்த மார்ஸ் 2020 ரோவரில் 23 கேமராக்கள், லேசர்கள் உள்ளிட்ட கருவிகள் பொறுத்தப்பட்டுள்ளன.

மேலும் இந்த ரோவருடன், ஆளில்லா சிறிய ஹெலிகாப்டர் ஒன்றையும் இணைத்து விண்ணில் செலுத்தவும் நாசா திட்டமிட்டுள்ளது. கூடவே ஒரு ரோபோவும் செல்லவிருப்பதாகவும் கூறப்படுகிறது. வருகிற ஜுலையில் அனுப்பவுள்ள மார்ஸ் ரோவர் 2021 பிப்ரவரி மாதம் செவ்வாயில் தரையிறங்கும் என கூறப்படுகிறது.