1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : சனி, 4 ஜூலை 2015 (05:09 IST)

பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் வெளிநாடு சுற்றுப் பயணம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷியா உள்ளிட்ட முக்கிய நாடுகளுக்கு மீண்டும் சுற்றுப் பயணம் செய்ய உள்ளார்.


 

பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 6ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை 5 மத்திய ஆசிய நாடுகளுக்கும், ரஷியாவுக்கும் சுற்றுப்பயணம் செல்கிறார்.
 
இந்த சுற்றுப் பயணத்தில் ஜூலை 6ஆம் தேதி உஸ்பெகிஸ்தானுக்கும், அங்கிருந்து 7ஆம் தேதி கஜகஸ்தான்னுக்கும், 8ஆம் தேதி ரஷியாவுக்கும் செல்கிறார். ஜூலை 10ஆம் தேதி துர்க்மெனிஸ்தானுக்கும், 11ஆம் தேதி கிர்கிஸ்தானுக்கும், ஜூலை 12ஆம் தேதி தஜிகிஸ்தான் பயணம் மேற்கொள்கிறார்.
 
இந்த பயணத்தின் போது, போர்த்திறன் மற்றும் பொருளாதார மேம்பாடு, எரிசக்தி ஒப்பந்தங்கள் ஆகிய முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
மேலும், ரஷியாவில் நடைபெற உள்ள பெறபிரிக்ஸ் மாநாட்டிலும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்.சி.ஓ.) நாடுகளின் மாநாட்டிலும் கலந்து கொள்கிறார். இதன் மூலம் 5 மத்திய ஆசிய நாடுகளுக்கு ஒரே நேரத்தில் பயணம் மேற்கொண்ட முதல் இந்திய பிரதமர் என்ற பெயரை நரேந்திர மோடி பெறுகிறார்.
 
பிரதர் நரேந்திர மோடி அடிக்கடி வெளிநாட்டுப் பயணம் செல்வதாக எதிர்க்கட்சிகள் ஏற்கனவே கடும் குற்றம் சாட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.  இதையும் தாண்டி மீண்டும் மோடி வெளிநாட்டுப் பயணம் செய்கிறார்.