திங்கள், 18 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 29 நவம்பர் 2016 (14:55 IST)

நீச்சல் உடை அழகி போட்டியில் பர்தாவுடன் வந்த பெண்ணுக்கு பாராட்டு

அமெரிக்க மின்னெசோட்டா பகுதியில் நடைப்பெற்ற அழகி போட்டியில் பங்கேற்ற முஸ்லீம் பெண் ஒருவர் பர்தா உடை அணிந்து வரலாற்று சாதனை படைத்தார்.


 

 
அமெரிக்காவின் மின்னெசோட்டா பகுதியில் அண்மையில் அழகி போட்டி ஒன்று நடைப்பெற்றது. அதில் 44 அழகிகள் கலந்து கொண்டனர். இந்த அழகி போட்டி மின்னெ சோட்டா யு.எஸ் என்று பெயரிடப்பட்டு இருந்தது.
 
அழகிப்போட்டியின் ஒரு பிரிவாக நீச்சல் உடை அணிந்து உடல் அழகை காட்டும் பகுதி உண்டு. அதில் கலந்துக்கொண்ட ஹலிமா ஏடன்(19) என்ற முஸ்லீம் பெண் ஒருவர் உடல் முழுவதையும் மறைக்கும் பர்தா உடை அணிந்து வரலாற்று சாதனை படைத்தார். 
 
அதில் வெற்றி பெற்ற அவர் அரையிறுதிக்கு தகுதிப் பெற்றார். இவரை தவிர மற்ர அழகிகள் அனைவரும் பிகினி உடையில் வலம் வந்தனர். மேலும் ஹலிமா ஏடன் அமெரிக்கவாழ் சோமாலியர் என்பது குறிப்பிடத்தக்கது.