1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்
Written By Geetha Priya
Last Modified: வெள்ளி, 25 ஏப்ரல் 2014 (13:27 IST)

சரும நோயை குணமாக்கும் தாய்ப்பால் சோப்பிற்கு அமோக வரவேற்பு

சீனாவை சேர்ந்த பெண் ஒருவர் தாய்ப்பாலை கொண்டு சோப் தயாரித்து விற்பனை செய்ய துவங்கியதுமே, அவரின் தாய்ப்பால் சோப்பிற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
சீனாவை சேர்ந்த பெண் ஒருவர் அண்மையில் ஒரு குழந்தையை பெற்றெடுத்தார். அவர் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தப்போது, குழந்தை பால் குடிக்க மறுத்ததை அடுத்து, அவருக்கு சுரக்கும் பாலை வீணாக்கும் நிலை ஏற்பட்டது.
 
இதனால் வேதனை அடைந்த அவர், தாய்ப்பாலை பயன்படுத்தி சோப்களை தயாரிக்க முடிவு செய்தார்.  அவரது இந்த முயற்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. 
 
இவர் தயாரிக்கும் தாய்ப்பால் சோப்கள், குழந்தைகளுக்கு ஈரத்தன்மையால் ஏற்படும் சரும நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது என தெரிவித்துள்ள இப்பெண், சோப்களை ஆன்லைன் மூலம் பிரபலப்படுத்தினார். 
 
eBay ,Amazon, Taoba  போன்ற வியாபார இணையதளங்களில் இந்த தாய்ப்பால் சோப்பிற்கான  ஆர்டர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.