1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : ஞாயிறு, 24 செப்டம்பர் 2017 (14:59 IST)

ராக் ஸ்டாரான மோப்ப நாய்

மெக்சிகோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்க மீட்புப் பணியில் சிறப்பாக செயல்பட்டு அசத்திய மோப்ப நாய் சமூக வலைதளங்களில் ராக் ஸ்டாராகியுள்ளது. 


 

 
மெக்சிகோவில் கடந்த செவ்வாய்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 50க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானது. சுமார் 290 பேர் உயிரிழந்தனர். அங்கு மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
 
கடற்படையில் சேர்ந்த மொப்ப நாய்கள் மீட்பு பணிக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் ஃப்ரைடா என்ற மோப்ப நாய் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்பதில் துரிதமாக செயல்படுவதால் மக்களிடம் பிரபலம் அடைந்துள்ளது.
 
ஃப்ரைடா 12 பேரை உயிருடன் மீட்டுள்ளது. மேலும் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 40 பேரின் உடல்களையும் கண்டுபிடிக்க உதவியுள்ளதாக மெக்சிகோ கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
 
ஃப்ரைடாவின் புகைப்படம் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டுள்ளது. ஏராளமான மக்கள் அந்த பதிவுக்கு லைக் போட்டு பகிர்ந்து வருகின்றனர். டுவிட்டரில் ஃப்ரைடா 92ஆயிரம் லைக்ஸ் பெற்று கலக்கி வருகிறது.
 
நிலநடுக்கதால் மக்கள் சோகத்தில் இருந்தாலும் ஃப்ரைடாவை பாராட்டி வருகின்றனர். இது சோகத்தில் உள்ள மக்களுக்கு உத்வேகம் அளிப்பதாக அமைந்துள்ளது.