2021ன் மோசமான நிறுவனம் பேஸ்புக்..! சிறந்த நிறுவனம்..? – கருத்துக்கணிப்பு முடிவுகள்!
2021ம் ஆண்டின் மோசமான நிறுவனங்கள் குறித்த நடத்தப்பட்ட சர்வேயில் பேஸ்புக் நிறுவனம் முதல் இடத்தை பிடித்துள்ளது.
2021ம் ஆண்டு முடிவடையும் நிலையில் இந்த ஆண்டின் சிறந்த விஷயங்கள் குறித்த பல சர்வே முடிவுகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இந்நிலையில் யாஹூ நிறுவனம் இந்த ஆண்டின் மோசமான மற்றும் சிறந்த மென்பொருள் நிறுவனங்கள் குறித்த சர்வேயை மேற்கொண்டது.
இதில் தற்போது மெடா என பெயர் மாற்றம் செய்யப்பட்ட பேஸ்புக் நிறுவனம் மோசமான நிறுவனங்களில் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த ஆண்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பேஸ்புக், வாட்ஸப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகள் ஒரே நாளில் முடங்கியதால் ஸுக்கெர்பெர்க் பல கோடி வருவாயை இழந்தார். அதுபோல மெடாவின் செயலிகள் தனிநபர் தகவல்களை பகிர்வதாகவும் புகார் உள்ளது. இவ்வாறான எதிர்மறை கருத்துகளால் மெட்டா மோசமான நிறுவனமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதற்கு அடுத்து இரண்டாவது இடத்தில் சீன நிறுவனமான அலிபாபா உள்ளது. இந்த ஆண்டின் சிறந்த நிறுவனங்களில் முதல் இடத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம் உள்ளது.