வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: திங்கள், 27 ஜனவரி 2020 (15:32 IST)

ஆணுக்கு குழந்தை பிறந்த விநோதம்;மருத்துவர்கள் அதிர்ச்சி

இலங்கையில் ஆண் ஒருவர், பிரசவ வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, குழந்தை பிறந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.

இலங்கையின் தெற்கு மாத்துறை பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு வயிற்று வலி ஏற்பட்டு தாடி, மீசையுடன் ஆண் ஒருவர் வந்துள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வயிற்றில் குழந்தை இருப்பதற்கான அறிகுறி தெரிந்துள்ளது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள், அவரை பிரசவ வார்டுக்கு அனுப்பி வைத்தனர்.  பிரசவ வார்டில் தாடியுடன் வந்தவரை பார்த்த மற்ற பெண்கள் அரண்டுப் போயினர்.

பிரசவ வார்டில் வலியில் துடித்துக் கொண்டிருந்த அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இதனை அறிந்த மருத்துவமனை ஊழியர்கள் அனைவரும் அதிர்ச்சியில் மூழ்கினர்.

இது குறித்து மருத்துவமனை நிர்வாகம், ”அந்நபர் பெண்ணாக பிறந்து ஹார்மோன் சுரப்பு காரணமாக ஆணை போல் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார். ஆதலால் தான் அவருக்கு தாடி, மீசை ஆகியவை வளர்ந்துள்ளது” என கூறியுள்ளனர்.

அவரால் அக்குழந்தைக்கு பால் கொடுக்க முடியாது என்பதால் அக்குழந்தையை மருத்துவமனையே பராமரித்து வருகிறது. அவர் அந்த குழந்தையை வளர்க்க விரும்பவில்லை எனவும் கூறிவிட்டார்.

அவர் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார் எனவும், அவரது பெயரை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.